பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளர் பார்வையில்

ஆசிரியர்


❖ 1952ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் நாள்.

சோவியத் யூனியனில் சில காலம் தூதுவராயிருந்த அவர் விடை பெற்றுத் தாயகம் திரும்பும் தருணம்.

பவ்லோப் (Pavlov) என்னும் ருசிய உளவியல் பேராசிரியருடன் ஸ்டாலினைச் சந்திக்கிறார் அவர்.

"எங்கள் நாட்டில் ஒரு மாமன்னர் இருந்தார்; ஆயிரக் கணக்கான வீரர்களின் குருதிப்புனலில் குளித்தெழுந்து வெற்றி வாகை சூடிய பிறகு வெறுப்படைந்தார்; பதவியைத் துறந்து புத்த பிக்குவானார். நீங்களும் கூட வன்முறைப் பாதையில் வந்திருக்கிறீர்கள், யார் கண்டது, அந்த மாதிரி நீங்களும் ஆனாலும் ஆகலாம்' என்றார் அவர்.

அதைக் கேட்ட ஸ்டாலின் "ஆமாம், அப்படி ஏதாவது அதிசயம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, நானும் இறையியற் பள்ளியில் ஐந்து வருடங்கள் இருந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்போது அவர் ஸ்டாலின் கன்னத்தையும் முதுகையும் தட்டிக் கொடுத்தார். தலையை மெல்லத் தடவிக் கொடுத்தார்.

உடனே ஸ்டாலின் 'என்னை ஒர் அரக்கனாக நினைத்து ஒதுங்காமல், ஒரு மனிதனாக பாவித்து நெருங்கிய முதல் ஆள் நீங்கள்தான்.... நீங்கள் இங்கிருந்து புறப்படுகிறீர்கள். வருத்தத் தோடு விடைதருகிறேன்.... நீங்கள் நெடுங்காலம் வாழவேண்டும்" என்றார்.