பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 38 உருப்படியாகக் கிடைக்கவில்லை. தற்காலத்தில்கூட திரைப்பாடல் களில் "பாடறியேன் படிப்பறியேன்” என்று தொடங்கி வழக்கமான கவிஞரின் சொந்தவரிகள் சேர்க்கப்பட்டு பாடல் உருவாடு விடுவதுபோல சங்கப்பாடல்களில் பழைய வாய்மொழிப் பாடல்களின் மரபு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடல்கள் உருவாயின. சங்கப் பாடல்கள்கூட முழுவதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவற்றின் கொள்ளுத் தாத்தாவான வாய்மொழிப் பாடல்கள் கிடைக்கும் வாய்ப்பில்லை. தாத்தாவின் சாயலைப் பேரனின் முகத்தில் கண்டு மகிழ்வதுபோல, திருப்தி கொள்ள வேண்டியதுதான். அந்தச் சாயலைப் பற்றி எழுத வந்த மு.வ 'சங்க இலக்கியம் எழுந்த காலத்தில் அந்த (பழைய) நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைபட்டு, குறிஞ்சி முல்லை - மருதம் - நெய்தல் - பாலை என்னும் ஐந்திணைப் பாடல்களாக அமைந்தன. பழங்காலத்து நாட்டுப் பாடல்கள் நமக்குக் கிடைக்க வழியில்லை. அவற்றின் மரபுகளை ஒட்டிப் புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்தினைப் பாடல்களும் முழுதும் கிடைக்க வழி tණ්ඨීත ෙ** (மு.வ. த.வ. ப.30) என்பார். நாட்டுப்புறப் பாடல்களில் கருத்துக்களைக் கூறுவதில் ஒளிவு மறைவு இருக்காது. பாடுகிறவனுக்கும் மற்ற புலவர்களைப்போல எந்தக் கட்டுதிட்டமும் கிடையாது. அந்த நாட்டுப்புற பழைய வாய்மொழிப் பாடல்களின் மரபுவழி வந்ததனால்தான் சங்கப் பாடல்களில் நாட்டின் பெருமையும் பேசப்படுகிறது. நாட்டில் நிலவிய வறுமையும் பாடப்படுகிறது. அதனால்தான் சிறுபா ணாற்றுப்படையில், உப்பில்லாமல் வேகவைக்கப்பட்ட கீரையை கதவைச் சாத்திவிட்டு (மான உணர்ச்சி காரணமாக) உண்ணும் மக்கள் இருந்ததையும் சங்ககாலப் புலவன் பாடத் தவறவில்லை. பண்டை நாட்டுப்புற மனிதன் செல்வத்தில் ஏழையாய் இருந்தாலும் இயற்கையோடு தோழமை பூண்டவனா யிருந்தான். எனவே அவனது வாழ்வில் இயற்கை பங்கு கொண்டதுபோலவே அவன் வாயிலிருந்து வெளிவந்த பாடல்களிலும் இயற்கை இழையோடியது.