பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் காதல் கவிதைகள்

1. காதலாகிக் கசிந்துருகி காதல், காதல், காதல் காதல் போவின் காதல் போயின் சாதல், சாதல், சாதல்..... எனும் மகாகவி பாரதியின் காதல் பற்றிய கவிதை வரிகள் காதலருலகில் சிரஞ்சீவித் தன்மை பெற்றவை. காதலர்களின் வேத வாக்கியங்கள் இவை. விளக்கின் ஒளியைப் பழம் என்றெண்ணி வீழும் விட்டில் பூச்சிகளாக காதல் கைகூடாவிட்டால் சாதல் உறுதி என்று தெரிந்தபின்பும் எத்தனை லைலா - மஜ்னுக்கள், அம்பிகாபதிஅமராவதிகள், சலீம் - அனார்கலிகள், ரோமியோ ஜூலியத்கள், செத்தொழிந்து போனார்கள். ஏலம் கூறுகின்றவன் மூன்று முறை கூறிவிட்டான் என்றால் ஏலம் கூறப்பட்ட பொருள் அந்த விலைக்கு உறுதியாகிவிட்டது என்று பொருள். அதுபோல அல்லவா பாரதியும் மும்முறை முழங்குகிறான். ஆம்! காதல் உறுதி எனில் அதை அடையாவிட்டால் சாதலும் உறுதி என்பதைப் பறைசாற்றுவதைப் போலப் பகர்கிறான். சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, செய், அல்லது செத்து மடி' எனும் முழக்கம் எழுந்தது. காதலர் விடுதலைப் போராட்ட வீரர்களைப் போலவே தம் இலட்சியத்தில் பிடிவாதமும், தீவிரமும் கொண்டவர்கள். தியாகம் செய்யவும் தயங்காதவர்கள். காதல் செய்வோம். கை கூடாவிட்டால் செத்து மடிவோம் என்று வேகம் காட்டுகிற காதல் இயக்க தீவிரவாதிகள் காதலர் என்பதை மற்றவர்களுக்கு ஒர் அச்சுறுத்தலுடன் உணர்த்தவே பாரதி