பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 66 4. கண்ணன் பாட்டும் காதல் பாட்டே கண்ணன் பாட்டு 1917-இல் வெளிவந்தது. இதில் கண்ணன் என் காதலன் எனும் தலைப்பிலான கவிதைகளும் கண்ணம்மா என் காதலி எனும் தலைப்பிலான கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 23 கவிதைகள் அடங்கியுள்ள கண்ணன் பாட்டில், தூண்டிற்புழுவினைப் போல், நேரம் மிகுந்த தின்னும், திக்குத் தெரியாத காட்டில், கண்ணன் மனநிலையை, ஆசை முகம் மறந்து போச்சே, கனிகள் கொண்டுதரும், சுட்டும் விழிச்சுடர்தான், மாலைப் பொழுதிலொரு, தில்லித்துருக்கர், மன்னர் குலத்தினிடை, தீர்த்தக் கரையினிலே, பாயு மொளி நீயெனக்கு எனத் தொடங்கும் 12 பாடல்கள் மட்டுமே கண்ணம்மா என் காதலி, கண்ணன் என் காதலன் எனப் பாவித்துப் பாடப்பட்ட காதல் கவிதைகளாகும். வழி வழி வந்த மரபின் தாக்கம் பாரதியின் பாவில் பல இடங்களில் பரிணமிக்கக் காணலாம். திங்களு மாதித் தியனு மெழுந்தாற்போல் அங்க ணிரண்டுங் கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் என்று பாரதி கேட்பதும் அந்தப் பாரம்பரியத்தின் வெளிப்பாடே று து 'இஸ்லாமிய சூபிக் கொள்கை அடிப்படையில் பாரசீக - உருது மொழிகளில் உள்ள பக்திக் காதல் காவியம் சிறந்தது’ என்பார் எச்.ஆர். கிருஷ்ணன், ஐ.சி.எஸ். பஞ்சாபி மொழி இலக்கியத்திலும்கூட இத்தகைய சூபிக் கவிஞர்களின் கவித்துவச் செல்வாக்கு மிகுதி. இறைவனிடம் காதல் வசப்பட்டதாகப் பாடும் பக்திப் பாவாணர்கள் தம்மைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் கருதிப் பாடியுள்ளனர். ஆனால் இந்த மரபிற்கு மாறாக, இறைவனைக் காதலியாகப் பாடுவார் பாரதி. 'கண்ணம்மா என் காதலி' எனும் தலைப்பில் பாடி, இந்த வகையில் மரபில் புதுமையைப் புகுத்துகிறார் பாரதி. எண்ணும் பொழுதில் எல்லாம் அவன்கை இட்ட இடத்தினிலே