பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 69 இரேக்க மரபில் தன் தாயின் மீதே பிள்ளைக்கு ஏற்படும் ஈர்ப்பை பாடிப்பஸ் காம்ப்ளக்ஸ்' என்று, மனோதத்துவ ரீதியாகக் குறிப்பிடு வார்கள். தாயைப் போல் தனக்குப் பெண் வேண்டுமென்று கேட்ட பிள்ளையாரை இந்து மத புராண மரபில் அந்த வகை எடுத்துக் தாட்டாகச் சொல்வர். சரஸ்வதி காதல் எனும் தோத்திரப் பாடலில்,

பிள்ளைப் பிராயத்திலே அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்குப் பள்ளிப்படிப்பினிலே மதி பற்றிட வில்லை...

என்று பாரதி பாடியிருப்பது ஒரு வேடிக்கையான நிலைமை. சரஸ்வதி கல்விக்குரிய தெய்வம் என்று இந்து சமய புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த சரஸ்வதியை பிள்ளைப் பிராயத்திலே காதலித்ததனால் கல்வி பாழானதாகப் பாடியிருப்பது ஒரு மாறுபட்ட நிலையின் வெளிப்பாடு. இருபத்தி இரண்டு வயது வரை இந்த நிலை நீடித்ததென்பான். அடுத்து வரும் லட்சுமி காதல் எனும் தோத்திரப் பாடலில், சோதி முகத்தின் அழகைக் கண்டென்றன் சிந்தை திறைகொடுத்தேன்- அவள் செந்திருவென்று பெயர் சொல்லினாள்; மற்றும் அந்தத் தின முதலா- நெஞ்சம் ஆரத்தழுவிட வேண்டுகின்றேனம்மா! என்று லட்சுமியிடம் ஆரத்தழுவ ஆசை கொண்டதைத் துணிவுடன் தெரிவிக்கிறான் பாரதி. அதே லட்சுமி பேரில் கமல மேவும் திருவே - நின்மேல் காதலாகி நின்றேன். நின்னை மார்பு சேரத் - தழுவி நிகரிலாது வாழ்வேன். என்று லட்சுமி பிரார்த்தனையில் கூடத் தெரிவிக்கத் துணிகிறான். பாரதி அறுபத்தாறில் பராசக்தியை,