பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 70 邻瑞·冷始姆 தாமரைநேர்முகத்தாள்காதல் வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும், வண்டினைப் போலெனையும்உரு மாற்றிவிட்டாள் 'வண்டினைப் போலெனையுரு மாற்றி விட்டாள்" என்று பாடிய பாரதி, மூன்றாவதாக, காளிபேரிலும் இதே மாதிரி அவள் வடிவ மீதில் வேட்கை ஏற்பட்டதாகப் பாடினானாம் கிட்டச்சென்றபோது, அது அன்னை வடிவம் என்று தெரிந்துகொள்வதாகப் பாடுகிறான். அவள் அருள் இருந்தால் உலகில் அனைத்தும் வசப்பட்டுவிடும் என்று பாடி முடிக்கிறான். கன்னி வடிவமென்றே - களி கண்டுசற் றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா! இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! என்று காளி காதலில் மட்டும் பாரதி வேறுபட்டு நிற்கிறான். தோத்திரப் பாடலில், முருகக் கடவுளுக்குத் தலைவி, வல்லவேல் முருகன் - தனையிங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று கிளியைத் தூது அனுப்புகிறதாக வரும் கவிதையையும் கூட காதல் கவிதையாகக் கொள்ளலாம். தோத்திரப் பாடல்களிலே "மகாசக்திக்கு விண்ணப் பம்' எனும் கவிதையில் மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு என்ற கவிதையில் கூட மகாசக்தி பேரில் காதல் எனச் சொல்லாமல் பொதுவான காதல் வேட்கையைக் கொன்று விடும்படி கோரிக்கை விடுக்கிறான் பாரதி. இவ்வாறு தோத்திரப் பாடலில் காதலை வாழவிடு அல்லது சாகவிடு என்பதை இடம்பெறச் செய்கிறான்.