பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஒரு பார்வை & ళ్మీ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு மக்கள் கவிஞர். பாமரர் போற்றிய கவிஞர். மக்கள் பேச்சு வழக்குகளிடையே கவிதைகளைத் தந்தவர். பேராசிரியர் பாப்பையா அவர்களின் பட்டிமன்றப் பேச்சுக்களைக் கேட்டவர்களுக்குத் தெரியும், அவர் நடை பற்றி... அவர் அசல் கிராமத்தவர் மாதிரியே பேசி வாதங்களைச் சொல்வதால்தான் அவர் பட்டிமன்றங்களை மக்கள் காணுகின்றனர். பாமரர் பாராட்டும் பட்டிமன்ற வானர் பாப்பையா அவர்கள் பாமரர் போற்றிய, பாமரர் நடையில் பாடிய பட்டுக்கோட்டையைப் பற்றித் திறனாய்பு நூலை தந்திருப்பது மிகப் பொருத்தம். அவர் பாடவும் தெரிந்தவர்; இசைப்போட்டிகளிலே பரிசும் பெற்றவர்; பட்டுக் கோட்டையின் பாட்டு பற்றி இசையினால் மட்டுமா என்று கண்டு சொல்லவும் திறமை பெற்றவர். பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் பற்றி ஆராய வந்த நூல்களிலே பாப்பையாவின் நூல் முன்னோடி, 1979லேயே இதன் முதல் பதிப்பு வந்துவிட்டது. பட்டுக்கோட்டை வாழ்ந்தது 29 ஆண்டுக்காலம்தான். குறுகிய காலத்துள் எவ்வளவு பெரிய இலக்கிய பாதிப்பை (impact) அவர் திரைப்படப்பாடல்துறையிலும் சரி, கவிதை உலகிலும் சரி நிகழ்த்திவிட்டார் என்று எண்ணும்போது இது ஒரு Ginnes சாதனையே. அதிலும் அவர் கவிதை விளைச்சல் காலம் 9 ஆண்டுகளே; 21 முதல் 29 வயது வரை; 1951 முதல் 1959 1ெர்ை. "வறுமையினைச் சுமந்து கொண்டு விடுதலைத்தாய் வருகைக்கு முழக்கமிட்ட பாரதியே' என்று பட்டுக் கோட்டை பாரதியை