பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி ஆனாய்! பொன்னடி - அத் திருத்தொண்டன் இதயம்; வண்ணப் பூவடி - அப் புகழாளன் வதனம் என்றும் முன்னடி வைக் கும்வீரன் ஒளிச்சி ரிப்பு முத்தடி, அம் முத்துக்கும் அழிவா? ஐயோ! என்னடி இக் கொடுமையைப்போய் எங்கே சொல்வோம்? எப்படித்தான் தாங்குவதோ? என்று பெண்கள் கென்னடி - உன் மறைவறிந்து கலங்கு கின்றார்; கிளிமார்பில் அடித்தபடி புலம்பு கின்றார். நிறவெறியை அழிப்பதற்குப் பாடு பட்டாய்! நீக்ரோக்கள் அடிமைகளென்றுரைப்போர் நெஞ்சக் கறைவெறியை அழிப்பதற்குத் திட்டம் இட்டாய்! காலத்தின் முகத்தினிலே குருதி பூசும் மறவெறியை அழிப்பதற்கும் முயற்சி செய்தாய்! மனிதாபி மானத்தின் சிகரம் நீதான்! அறநெறிசொல் அரசியல்நூல் அகரம் நீதான்! அநியாயம் ஒருகயவன் அழித்தான் உன்னை 113 0 மீரா கவிதைகள்