பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரதிர, விண்ணதிர, அலைகள் பாடும் கடலதிர, திசையெட்டும் அதிர இந்தப் பாரதிர அறமுழக்கம் செய்தாய்! சற்றும் படிக்காமல் தமிழினிலே என்ன உண்டென்பாரதிரத் தமிழ்முழக்கம் செய்தாய்! சாகாப் பாரதியின் வரலாற்றை - ஆதிக் கத்தின் வேரதிர அவன்வைத்த வேட்டுப் பாட்டை விரித்துரைத்தாய்! கம்பனுக்கும் பெருமை சேர்த்தாய்! தனக்காகக் கார்மேகம் பொழிவ தில்லை; தனக்காகச் சோழநதி பாய்வ தில்லை; தனக்காகப் பூங்குயில்கள் இசைப்பதில்லை; தனக்காகச் செவ்வாழை செழிப்பதில்லை; தனக்காக இயற்கையிலே முகிழ்த்த ஒன்றும் தழைப்பதில்லை; பிழைப்பதில்லை; மனிதன் மட்டும் தனக்காக வாழ்கின்றான் என்பர்; அந்தத் தரையுரையைப் பொய்க்கவைத்த சான்றோன் நீயே! “தாமரை' ஜீவா நினைவுமலர் மீரா கவிதைகள் D 112