பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரைவேந்தர் வேலாட்சி குறைந்த போதும் தமிழ்வேர்ந்தர் கோலாட்சி மறைந்த போதும் உரைவேந்தர் நூலாட்சி உயரக் கண்டோம்; உண்மையிலே உளங்குளிர்ந்தோம்! தன்நாட்டில்தான் வரிவேந்தர் புகழ்செல்லும்; சங்கப் பாட்டு வரிவேந்தர் தங்கள் புகழ் முத்துத் தூங்கும் விரிகடலுக் கப்பாலும் செல்லும்; தெற்கில் வீசும்சந் தனக்காற்றும் வாழ்த்துச் சொல்லும்! உங்கள்.நற் பிறப்பறிந்த பின்னர் தானோ உ.வே. சா இளைப்பாறச் சென்றார்? ஐயா! உங்கள் சிந் தனைவளத்தை நம்பித் தானோ ஒளிநெஞ்சர் திரு. வி.க உறங்கச் சென்றார்? உங்கள் நா வன்மையினை நம்பித் தானோ உயர் ச.சோ. பாரதியார் அமைதி கண்டார்? உங்கள் முத் தமிழ்ப்புலமை நம்பித் தானோ உரைகாரர் அனைவருமே ஒய்வெடுத்தார்? பயனுள்ள வரலாற்றைத் தருவதாலே பரணர்தான்; பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தருவதாலே நக்கீரர் தான்தாங்கள் இந்த நாளில் கயல்மன்னர் தொழுதமொழி காப்பதால் தொல் காப்பியன்தான் காப்பியன்தான் தாங்கள் எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்ப்பதாலே தாங்கள் அவ்-ஒளவைதான் ஒளவை யேதான்! மீரா கவிதைகள் 0 137