பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுச்சுடர் காட்டப் பொன்விளக் கேற்ற மேட்டை வெட்டிப் பள்ளம் உயர்த்திச் சமதர்மப்பயிர் தழைக்கச் செய்யத் தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான்! இறைவனைத் தேடி எங்கே அலைகிறாய்? மெய்யொளி தங்கும் மேனி வியர்வையில் - உழைப்பில் இறைவன் உள்ளான் என்றே உரைக்க - மானிட அறிவை உரைக்க எழுதவும் படிக்கவும் இயலா திருக்கும் கையும் கண்ணும் காணோம் என்னும் புதுயுகம் ஒன்றைப் பூமியில் சமைக்க அடிமைத் தளையை அடித்து நொறுக்கக் கல்போல் பலத்த கருத்தை அளிக்கத் தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான்! தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான்! எலிகள் கோடி எங்கோ ஒதுங்க ஒநாய் இலட்சம் ஒடி ஒளிய நரிகள் ஆயிரம் நடுங்கி மறைய அரிமாப் போல அஞ்சா நெஞ்சத் தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான்! தலைவன் வருகிறான் தாயகம் போற்றவே! 1964 மீரா கவிதைகள் 0 142