பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணிர் ஆடையைத் தரித்து நின்று கண்ணியந் தன்னைக் காப்பாற்றக் கண்டோம்! இப்படி எத்தனை ஏழைகள் உளரோ? இப்படி எத்தனை காட்சிகள் உளவோ? எப்படி இந்தியா? இதுதான் இந்தியா! என்றே கொஞ்சம் ஏளனச் சிரிப்புடன் கூறி முடித்தான் குப்பு சாமி! நானும், திருப்பதி சாமி திருப்பதி சாமி! உரைப்பது ஒன்றுகேள்! நின்றுகேள்! என்று திரும்பிப் பார்த்தேன் திருப்பதி சாமியை பாவம்; அவரோ பாரம்தாங்காமல் சோகம் பரவிய முகத்துடன் வேகமாய்ப் போனார் வீட்டை நோக்கியே! 1963 149 ) மீராகவிதைகள்