பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலிகளை நம்புகிறாய், போ போ! சரி, போ! போ: எக்கேடுங் கெட்டுப் போ! போ! சமுதாய மே!அடுப்பில் மூட்டத் தக்க எரிவிறகு தருமரமாய்ப் பட்டுப் போ போ! எனக்கென்ன எக்கேடுங் கெட்டுப் போ! போ! நரிஊளைச் சத்தத்தைக் கேட்டு விட்டு நாதசுரம் யாழோசை என்றே உண்மை புரியாமல் பிதற்றிக் கொண்டி ருக்கும் உன்றன் போக்கையாரால்மாற்ற முடியும்? போ போ! குடிலர்கள் கூடாரம் ஆய்விட் டாய் நீ! கோட்சேக்கள் குகையாக மாறி விட்டாய்! படிக்காத பேதைகளின் விமர்சனத்தைப் 'பார்அடடா!' என்றியம்பத் தொடங்கி விட்டாய்! தடியெடுத்த கயவர்க்குத் தாளம் போடும் சமுதாய மே!உன்மேல் பற்றிக் கொண்ட கொடியபிணி கொல்லவந்த மருந்து வர்தம் குரல்வளையைப் பிடிப்பதற்கும் துணிந்து விட்டாய்! மீரா கவிதைகள் 0 152 బ్జ ! {