பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமையைக் கைது செய்! ஏனடா தம்பி, தயக்கம்? எழுவாய்! பழங்கதை பேசிப் பயனிலை புதிதாய்ச் செயப்படு பொருளைச் சிந்தையில் நிறுத்து! நன்மையை நாடு; நாடுஉன் நாட்டை! உண்மையைத் தழுவு நீ உன்னைத் திருத்திப் பிறரைத் திருத்து; பேணு பொதுநலம்! சுயநலம் தனைச்சுடு நினைவைச் சுத்தம்செய்! சிறுமையை நீக்கு சிந்திக்கப் பழகு! மூலையில் கிடந்து முடங்கியது போதும்; வெளியே புறப்படு! விழிகளைத் திறந்தே ஆழியைக் கவனி, அலைகளின் எழுச்சிகேள்! வானை நோக்கு வரையை நோக்கு தூய்மை விளையும் தோட்டமாய் உன்னை ஆக்கு நீ அநீதியைப் போக்கு சத்திய சொரூபம் காட்டு சுதந்திரமாய் நட எதற்கும்அஞ் சாமல் ஏறுபோல் நட நட! எங்கே அறத்தின் ஆலயம் உள்ளதோ எங்கே அறிவுத் திருவிளக் குள்ளதோ மீரா கவிதைகள் 0 160 اسم- سا