பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீ பரவட்டும்! நான்இந்த மண்ணுக்குச் சொந்தக் காரன் நாடாண்ட மாவீரன்! தீரன்! இன்றோ ஏன் இந்தக் கொடுந்தாழ்வு; எச்சில் வாழ்வு என்றெண்ணிப் பார்க்கட்டும் ஒவ்வோர் நெஞ்சும்! மீன்துள்ளும் பேராழி; வளநெய் வேலி விளைவயல்கள்; கனிமரங்கள் நிறைந்தி ருந்தும் ஏன் இந்த இடர்ப்பாடு; கண்ணிர்க் கோடு என்றெண்ணிக் கேட்கட்டும் ஒவ்வோர் நாவும்! விடுதலைப்போர்ப் பசிகொண்ட வெற்புத் தோள்கள் விம்மட்டும்; துடிக்கட்டும்; மானக் கைகள் கொடுமையினைக் களைந்தெறியும் வேலை ஏந்திக் குருதியினை முத்தமிட வெறிகொள் ளட்டும்! விடுபட்ட அம்புகளின் பாய்ச்சல் போல விழியிரண்டும் வீசட்டும் சீற்றப் பார்வை; எடு பிடிகள், கோழைகள், முக்கா டிட்டே ஏகட்டும்; எழுச்சித்திக் கதிர்பா யட்டும்! 1790 மீரா கவிதைகள்