பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரன் பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது - இருப்பினும் கவி பாரதிதாசனிடம் இருக்கும் குறைபாட்டை நீக்கித்தம் கவித்துளிகள் இனம், மொழிப் பாகுபாட்டைக் கடந்தவை என்று காட்டியதற்காகக் கவிஞர் இராசேந்திரனைப் பாராட்டத்தான் வேண்டும். 町 இன்னொரு துளி காண்போமா? மேற்கூறிய குறைபாட்டைத் தவிர பாரதிதாசன் கவிதைகளில் போற்றப்பட வேண்டிய புதுமைகள் பலப் பல! பாட்டாளி வர்க்கத்தின் குருதியைக் கொதிக்க வைத்து, நரம்புகளை முறுக்கேற்றி ஆணவங் கொண்டோர்க்கு எதிராக அரும்படை திரட்டிப் பெரும் போர் தொடுப்ப தற்குப் பாரதிதாசன் தீட்டிய பல கவிதைகள் பட்டைதீட்டப் பெற்ற வைரவாட்களாகத் திகழ்கின்றன. 'கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ? -புவி வாழ்வது தான் எந்தத் தேதியோ?" என்றும் 'எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப் புலிகள் நரிக்குப்புசிப்பளித்தே பெரும் புதரினில் தூங்கிடுமோ?" என்றும் பாடிய பாரதிதாசன் வெறும் 'பாரதிதாசன் மட்டு மல்லர்; பாட்டாளி வர்க்கத்தின் படைக்கலனுமாவார். இப்படைக் கலனைத் தாமும் பக்கபலமாகக் கொண்டிருக்க வேண்டும் இராசேந்திரன். இதோ கவிஞரின் ஒரு துளி. 'மனிதனாய் மாறு; மாற்று உன் சாதியை செத்த பிணத்தைக் கொத்துங்கழுகினும் 17