பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தாலும் அதை வெறும் மானுடக் காதலாகச் சொல்லாமல் ஓர்ஆன்மீகப் பரிமாணமும் தந்திருக்கிறேன். பெண்ணை வெறும் பெண்ணாக அல்லாமல் ஓர் இலட்சிய சமூக அமைப்பின் - பரிபூரணத்தின் குறியீடாகவே கையாண்டிருக்கிறேன். பதிப்பாளர் மீராவால் படைப்பாளர் மீராவுக்குப் பாதிப்பு உண்டானது பற்றி நினைத்து வருந்திய துண்டா? நான் பணியாற்றிய சிவகங்கை மன்னர் கல்லூரியில் பிரச்சினைகள் உண்டாகிப் போராட்டம் வெடித்தபோது இருமுறை நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். இதனால் நிரந்தரமாக வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. அதனால் நான் விரும்பிய பதிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு நீங்களும் காரணம். அபி'யின் கவிதைகளை வெளியிட விரும்பி நாம் சில பதிப்பாளர்களை அணுகியபோது, 'கவிதையா? விற்காதே’ என்று அவர்கள் புறக்கணித்ததைக் கண்டு கொதித்துப் போய் நாமே பதிப்பித்தால் என்ன?” என்று நீங்கள் கூறினர்கள். பதிப்பகத்திற்கு அன்னம்’ என்ற பெயரும் நீங்கள்தான் சூட்டினர்கள். நீங்களும், நானும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 'அன்னம்’ தொடங்கினோம். விளையாட்டாய்த் தொடங்கியது வினையாகிவிட்டது. நான் அதிலேயே மூழ்கிப் போனேன். அதனால் எழுத முடியாமல் போய்விட்டது. அதனால் எனக்கு வருத்தம் தான். அன்னம் பொருளாதார வகையில் தோல்விதான் என்றாலும் தரமான புத்தகங்களை அழகாக வெளியிட்டவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருப்பது ஆறுதலாக இருக்கிறது. 'அன்னத்தின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்? இரண்டு. ஒன்று, புதுக்கவிதைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. வானம்பாடி பத்திரிகையாக இருந்து புதுக்கவிதைக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்