பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தது. அன்னம்', பதிப்பகமாக இருந்து அதே பணியைச் செய்தது. 'கவிதை என்றால் விற்காது’ என்ற கருத்தை உடைத்தது. இரண்டு, கரிசல் இலக்கியத்தைப் பிரபலப்படுத்தியது. கி.ரா. மட்டுமல்லாமல் இன்னும் 5,6 பேர்களுடைய நூல்களை அன்னம் வெளியிட்டது. 'அன்னம் விடுதூது ஒரு நல்ல பத்திரிகையாக வந்து கொண்டிருந்ததே. ஏன் நிறுத்தினர்கள்? சிற்றிதழாக இல்லாமல் மிடில் மேகலை’னாகக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். ஏஜெண்டுகள் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். விளம்பரங்களும் பெற முடியவில்லை. அதனால் கையைக் கடிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாது என்ற நிலை வந்தபோது வேறு வழியின்றி நிறுத்திவிட்டேன். கவிஞர், உரையாளர், கல்லூரி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், ஆசிரியர் போராட்டத் தளபதி, பதிப்பாளர், அச்சக உரிமையாளர் என்று பல பணிகளில் முத்திரை பதித்திருக்கிறீர்கள். இன்னும் நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா? ஏதேனும் வருங்காலத் திட்டம்? நிரந்தரமாக நிற்கும்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வசன கவிதையில் நாடகமாகவோ, காவியமாகவோ ஒரு நூல் எழுதும் எண்ணம்இருக்கிறது. அதிகமாகப் படைக்காமல் போனதை இதன் மூலம் ஈடு செய்ய விரும்புகிறேன். 'கவிக்கோ முதல் இதழ் அக்டோபர் 1999 195