பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணைக் கிழித்திடும் மின்னல்நிறம் பகல் மேக நிறம் அந்தி வானநிறம் - இரு கண்ணைக் கவர்ந்திடும் கிள்ளை நிறம் - தேக்கு காட்டும் நிறம்செந்நெற் காட்டுநிறம் - சோலை வண்டு நிறம் இன்னும் என்னென்னவோ - நிறம் வாய்த்த வளைகாட்டிப் போட்டிடவே - அவள் வண்ணக் கரத்தைப் பிடித்தேனா? - ஒரு வளையல் காரனாய் வந்தேனா? என்ன பிறப்படா என்பிறப்பு - சே சே! என்ன பிழைப்படா என்பிழைப்பு! - சுவைக் கன்னற் கவிதை மொழியுடையாள் - துள்ளும் கயலைப் பழிக்கும் விழியுடையாள் - அந்த அன்னம் அருகினில் போயமர்ந்து - மின்னும் அழகுக் கரம்தான் பிடித்தேனா? தினம் என்னை மறந்து களித்தேனா? - நான் ஏற்ற பிறவி எடுத்தேனா? இது நாட்டுப்பாடல் ஒன்றின் தழுவல் 'தமிழ்நாடு' டிசம்பர் 1963 மீரா கவிதைகள் 0 77