பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானாக நான் இல்லை இனிப்பொறுக்கச் சக்தியில்லை அத்தான் என்றன் இறுதிமடல் இந்தமடல் இரவில் என்னால் தனித்திருக்க முடியவில்லை; திங்கள் சிந்தும் தணல்பொறுக்க முடியவில்லை; ஆமாம்! நீங்கள் கனியிருக்கக் காய்கவர நினைக்க லாமா? கரும்பிருக்க வேம்பெடுத்துக் கடிக்க லாமா? மனிதருக்கே யுரியபொருள் மோகங் கொண்டு மறந்தென்னைப் பிரிந்தெங்கோ இருக்க லாமா? கற்கோட்டை போல்இருந்தேன்; உங்கள் போக்கால் களிமண்ணாய்க் கரைகின்றேன்! தஞ்சைச் சீமை நெற்காட்டைப் போல்இருந்தேன்; பிரிவால் பாலை நிலம்போலக் காய்கின்றேன்! தமிழின் வெல்லச் சொற்பாட்டை எடுத்துத்தான் படித்தால் கூடச் சுவை உண்டா? சுகம்.உண்டா? ஏழு வண்ண விற்போட்ட வானத்தின் அழகைக் கூட வெறுக்கின்றேன்; சலிக்கின்றேன்; வெதும்பு கின்றேன்! மீரா கவிதைகள் 0 94