பக்கம்:முகவரிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இது இதுவாகவே இருக்கிறது.

எலியட்டும் எஸ்ரா பவுண்டும் புதுக்கவிதையில் புலிகள் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அந்தப் புலிகளைப் பார்த்து இங்கே சிலர் சூடு போட்டுக்கொண்டால் போதுமா?

அபி அபியாகவே இருக்கிறார்; இதில்தான் இவர் பெருமை அடங்கியிருக்கிறது.

'கனவுகளின் ஆழத்தில்
கற்பனையின் வேர்பாய்ச்சிக்
கவிப்பூக்கள் பூக்கின்றேன்'

என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் இவரிடம் கவிதையின் மொத்த வனப்பையும் தரிசிக்க முடிகிறது.

இங்கே யுகமுகடுகளுக்கே சென்று நிமிஷ நுரைகளோடு நேரங்கள் சரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் அதிசயக் கவிஞரைப் பார்க்க முடிகிறது. இங்கே தன்னையே எரித்து வெளிச்சம் உண்டாக்கித் தன் காதலியைத் தேடும் ஓர் அபூர்வக் காதலனைச் சந்திக்க முடிகிறது. இங்கே இமைக் கத்திரியால் துண்டிக்கப்படும் நித்திரையையும் தானே ஊர்ந்து கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதையையும் தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருளையும் காற்றை நிறுத்திச் சோதனை போடும் இரவையும் காலுக்குரிய முகத்தைக் கற்பனை செய்துகொள்ளும் கால்பந்தையும் காணமுடிகிறது.

'அனுபவ கனம் மிகுந்த’ இந்தக் கவிதைகளின் அழகை அனுபவிக்க வேண்டுமானால் ஒன்றின்மேல் ஒன்றாகப் படிந்த கற்பனைகளை விரித்து விரித்து உள்ளே உள்ளே புக வேண்டும். ஒன்றின்மேல் ஒன்றாக (overlapping) என்றால்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/13&oldid=969681" இலிருந்து மீள்விக்கப்பட்டது