பக்கம்:முகவரிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏதோ வெங்காயம் போல அல்ல - உரித்துப் போட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை என்று கூறிவிட.

இவை மொட்டுக்கள்; இதழ்களை விரித்துவிட்டுப் பார்த்தால் மகரந்தம் பொன்னிறமாகத் துலங்குமே, அந்த மொட்டுக்கள்! விதைகளை உள்ளடக்கிய அழகான மொட்டுக்கள்.



ழகின் உச்சி படிமம் என்றால் அதை முறைப்படி தொட்ட பெருமை இவருக்குரியது. இராமன் கை வில் போலவும் இராவணன் கை யாழ் போலவும் இவரிடம் படிமம் சொன்னபடியெல்லாம் கேட்கிறது.

இவர் பலவந்தப்படுத்துவதுமில்லை; அதனால் அது முரண்டு பிடிப்பதுமில்லை.

ஒரு காலத்தில் ஜாய்ஸ்கில்மர் (Joyce Kilmer) 'மரங்கள்' பற்றிப் பாடிய பன்னிரண்டு வரிக் கவிதை பலராலும் பாராட்டப் பெற்றது. பிறகு அதே கவிதை அவ்வளவு உயர்ந்த கவிதை இல்லை என்று தரமான இலக்கிய விமர்சகர்களால் தள்ளி வைக்கப்பட்டது. என்ன காரணம்?

• தன்பசி கொண்ட வேரால் பூமியின்மார்பில் பால்குடிக்கிறது.

• இலைக் கரங்களால் கடவுளைக் கும்பிடுகிறது.

• தன் கிளைகளில் குருவிக் கூட்டைச் சூடிக் கொண்டிருக்கிறது.

• பனி படிந்துள்ள நெஞ்சுடன் மழையோடு சேர்ந்து வாழ்கிறது.

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/14&oldid=969682" இலிருந்து மீள்விக்கப்பட்டது