பக்கம்:முகவரிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாஜ்மஹாலைப்போல, மழை வளமில்லாது நிறம் மங்கிப் போன கொக்குகளை இன்குலாப் கண்முன் நிறுத்தும் போது, இராமநாதபுர வட்டாரத்தில் சத்தான ஆகாரமின்றி நிறம் மங்கிப்போன மகளை, 'புள்ள கறுக்குளிச்சுப் போச்சு' என்று மருகும் தாயுள்ளம் வெளிப்படுகிறது.



1961... நான் சிவகங்கைக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்த வருடம். ஒருநாள் என் நண்பர் ஆங்கிலப் பேராசிரியர் பிரேமச்சந்திரனின் ஆங்கில வகுப்பை உரிமையோடு எடுத்துக்கொண்டு, பைரனின் Isles of Greece என்னும் அற்புதமான ஆங்கிலக் கவிதையைத் தமிழில் - புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு புரியும்படி நடத்திவிட்டு 'உங்களில் யாரேனும் இந்தக் கவிதையை வைத்துத் தமிழில் ஒரு கவிதை படைத்துக் காட்டுங்களேன்' என்று வேண்டினேன். மறுநாள் முன் வரிசையில் அமர்ந்து கவனமாகப் பாடங்கேட்ட அந்த மாணவர், உயிர்த் துடிப்புள்ள கவிதை ஒன்றை என்னிடம் நீட்டினார். படித்து வியந்து பாராட்டினேன். அந்த மாணவர் இன்குலாப் தான்.

கிரேக்க மக்களின் எழுச்சிக்குப் பாடிய பைரன் கவிதையைத் தமிழில் படைத்துத் தந்த அந்த நாளில் இருந்து இன்றுவரை - 'ஒடுக்குமுறைக்கான கருத்து அரசு உட்பட எங்கிருந்து வந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன்' என்று சுபமங்களா நேர்காணலில் குறிப்பிடும் இந்த நிமிடம் வரை - இனகுலாப் படைப்புக்கள் எதிர்ப்பு இலக்கியமாகவே (Protest Literature) அமைந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக் கிறது.

131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/132&oldid=969639" இலிருந்து மீள்விக்கப்பட்டது