இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்று நாவால்
இசைக்கிறேன்
வீர வியட்நாம்
தீரத் தலைவன்
ஹோசிமின் எழுதிய
'சிறைக் குறிப்புகள்'
படித்திருக்கிறேன்
அதற்கு இணையாய்
எழுதப்பட்டிருக்கும்
நூல் இது என்று
மதிக்கிறேன்
சிற்பி
வானம்பாடி இயக்கத்தில்
வந்ததொரு ஞானம்பாடி
அவர்
கவிஞர் மட்டும் அல்லர்;
கவிக்கோ அப்துல் ரகுமான் போல்
அறிஞரும் கூட....
பழந்தமிழ் நூல்முதல்
பாப்லோ நெரூடா
படைத்த நூல் வரை
படித்தவர்....
பாரதி பற்றி
வெளி வந்துள்ள
நூல்களையெல்லாம்
படித்தவர்
கரைத்துக் குடித்தவர்
பாங்குறப் பயின்ற ஆங்கில மொழியில்
பாரதியை வள்ளத்தோளுடன்
136