பக்கம்:முகவரிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழரின் இந்த நூல் அந்த அழகைத் தேடுகிறது. பொக்காரோ உருக்காலை, சூரத்கட் விவசாயப் பண்ணை, ராஞ்சி கன இயந்திரத் தொழிற்சாலை - இதேபோல் இன்னும் பல இடங்களில் அதைக் கண்டு வணங்குகிறது; வாழ்த்துகிறது. பொக்காரோ உருக்காலையை உருவாக்கிய சோவியத் சிற்பிகளுள் ஒருவர் பேசுகிறார்.

"இன்னும் ஒராண்டு காலத்தில் இந்தத் தொழிற்சாலையில் எனது வேலை முற்றுப்பெறும். அடுத்து இன்னொரு நட்பு நாட்டிற்குச் சென்று அங்கும் இதே போன்றதொரு தொழிற்சாலையைத் துவங்கப் பணியாற்றுவேன்."

எவ்வளவு தூய நட்பு எவ்வளவு உயர்ந்த உள்ளம்!

இதேபோல் பாலைவனாய்க் கிடந்த ராஜஸ்தான் மாநிலத்து சூரத் கட் பகுதியில் பசுமைப் புரட்சி ஏற்படுத்த சோவியத் நண்பர்கள் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்!

"இந்தியச் சகோதரர்களுக்கு ருஷ்ய மக்கள் வழங்கிய இயந்திரங்களின் எண்ணிக்கை எத்தனை பல்வேறு விதமான டிராக்டர்கள் 6, உழவு இயந்திரங்கள் 75; தானியம் மற்றும் உரம் தூவும் இயந்திரங்கள் 50; விதைவிதைக்கும் இயந்திரங்கள் 80; நிலத்தைப் பண்படுத்தும் இயந்திரங்கள் 500; கப்ளர்கள் 42, ரோலர்கள் 30; உமி நீக்கும் இயந்திரங்கள் 50; கம்பைனர்கள் 60...."

நான் நிறுத்தி விடுகிறேன்... புள்ளி விவரம் நிற்காதுபோல் தெரிகிறது. ஹோமரின் காப்பியத்தில் போருக்குப் புறப்பட்ட கப்பல்களின் பெயர்கள் அடுக்கப்படுவதைப் போல் இங்கே சோவியத் மக்கள் உதவிய கருவிகளின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.

பூமிக்கடியில் ஓடும் நீரைப்போல் இந்த நூல் முழுவதும் சோவியத் ஆதர்சம் அடிநாதமாய் ஒலிக்கிறது.

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/28&oldid=968481" இலிருந்து மீள்விக்கப்பட்டது