பக்கம்:முகவரிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலம் தெரிகிறது. "இடசந்து" என்பதற்கு இரண்டு வீட்டுக்காரர்களும் ஆளுக்கு ஒன்றரை அடி போட்டுக் கட்டுவது என்று பொருள் தந்திருக்கிறார் கி.ரா. இப்படிச் செய்ய இருவரில் ஒருவர் மறுக்கும்பொழுது விவகாரம் நீதிமன்றம் போகிறது. "ஈரங்கி (Hearing) என்பதற்கு 'ஆர்கியூமெண்ட் வாய்தா" என்று அவ்வளவு சரியாகப் பொருள் சொல்லியிருப்பதை நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களே நிச்சயம் மெச்சுவார்கள்.

அந்நிய ஆட்சியின் காரணமாக ஆங்கிலம் இங்கே ஒட்டிக் கொண்டது. படித்தவர்களிடம் ஆங்கிலம் ஆங்கிலமாகப் புழங்கியது என்றால் கிராமவாசிகளிடம் அது தமிழாடை பூண்டது. தமிழ்ச் சொல்போலவே ஆனது. Opinion, ஒப்பினியம் என்றும் Blank பிளாங்கி என்றும் Phonograph Box பூனைக்காரப் பெட்டி என்றும் ஓசைப்படாமல் உருமாறியுள்ளன. இவை போன்றனவே பெண்டு (Bend) எடுத்திட்டான், மேஜர் (Major) ஆயிட்டாள் என்பனவும்.

வரலாற்றிற்கு உதவும் கல்வெட்டுக்களில் காணப்படும் சொற்களும் கிராமங்களிலேயே புழக்கத்தில் உள்ளன. 'எதிரா' என்பதற்கு இங்கு "வரும் ஆண்டு" எனும் பொருள் தரப்பட்டுள்ளது. சோழர் கல்வெட்டுக்களில் 'எதிராம் ஆண்டு' என்ற சொற்றொடர் காணப்படுகிறது. யாழ் மக்களும் எதிராம் என்பதற்கு அடுத்து வரும் என்னும் பொருளில் பயன்படுத்துகின்றனர். (இலங்கை வானொலியில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை இன்ன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள்.)


இந்த வட்டார வழக்குச் சொல்லகராதி நெல்லை-கரிசல் காட்டுப் பகுதியில் புழக்கத்தில் உள்ள சொற்களைக்

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/59&oldid=968519" இலிருந்து மீள்விக்கப்பட்டது