பக்கம்:முகவரிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசப்படுகிற பாத்திரம் நாகம்மை. ஏசப்படுகிற பாத்திரம் அவளை ஒதுக்கிவைத்த சிவானந்தப் பெருமாள்.


தை இரணியல் மூக்காண்டிச்செட்டியார் பரம்பரையைப் பற்றியதுதான். என்றாலும் திரவி தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல்தான் கதையைச் சொல்லுகிறான். ஆசிரியர் கூற்றுப்படி 15 வயது முதல் 25 வயதுவரை திரவி தன் குடும்பத்தில் ஏற்பட்டநிகழ்ச்சிகளைச்சொல்லிக் கொண்டு போகிறான். இதிலேயே எழுபது ஆண்டு அளவுக்கான தலைமுறைக் கதைகள் வந்துவிடுகின்றன.

திரவியின் அப்பாநாகரு பிள்ளை, தன்சக்திக்கு மீறிச் செலவு செய்து இரண்டாவது மகள் (திரவியின் அக்கா) நாகம்மைக்குத் திருமணம் முடிக்கிறார். மாப்பிள்ளை அதே ஊர் புத்தன் தெருவில் இருந்த சிவானந்தப் பெருமாள். ஏகப்பட்ட ரொக்கம் கொடுத்தும் சீர்சிறப்புச் செய்தும் ஆறாவது மாதத்தில் அவனும் அவன் தாய் பாப்பாத்தியும் நாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். நாகுவின் அப்பா ஊர் டிரஸ்டிகள் கூட்டத்தில் முறையிடுகிறார். அவர்கள் பஞ்சாயத்து செய்தார்களேயொழிய சிவானந்தப் பெருமாளைத் தட்டிக் கேட்கவில்லை. 'இவள் பெண்ணே அல்ல' என்று குற்றம் சாட்டித் தீர்ந்து விடுவதாயும் கூறிவிடுகிறான் சிவானந்தன்.

இதற்கிடையில் குற்றாலம் என்ற வாலிபன் திரவிக்கு நண்பனாகிறான். அவன் பலாப்பழம் போன்றவன். ஊராரின் பார்வைக்கு முரடனாகத் தோன்றினாலும் நல்ல உள்ளம் உடையவன். அவனது அஞ்சாநெஞ்சம் திரவியிடம் உயர்ந்த எண்ணத்தை உருவாக்குகிறது.

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/75&oldid=969437" இலிருந்து மீள்விக்கப்பட்டது