பக்கம்:முகவரிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

   'என் சீதா, என் தெப்பக்குளம் என் மரம்
    இதெல்லாம் போனால் வராது'

என்று அவன் கூச்சலிடும்போது நம் மனம் மெளனமாய் அழுகிறது.

வயது மீறிய பருவத்தில் - பேரனைப் பார்த்த பிறகுங்கூடக் கருவுற்ற தன் தாயை நினைத்துக் கூசும் ஒரு மகனின் மனக் கலக்கம் ஏதோ பெரிய தவறு நடந்துவிட்டதைப்போல நாணி ஒடுங்கும் ஒரு தாயின் தவிப்பு - இவற்றை வைத்து எழுதப்பட்டதே 'அன்னை அல்லவா?' என்னதான் உயிர் ஒன்றிய தம்பதிகளாயிருந்தாலும் அவர்களது தாம்பத்திய வாழ்க்கைக்கு - புலன் உணர்வில் கரையும் போக வாழ்க்கைக்கு ஒரு எல்லை உண்டு என்று பாவிப்பதும், அதை மீறுவோர் மேல் அர்த்தமில்லாமல் ஒரு அசூயை கொள்வதும் இந்தியக் குடும்பங்களுக்கேயுரிய இயல்புகள். இவ்வியல்புகள் இக்கதையில் நுட்பமாய் வெளிப்பட்டுள்ளன. முப்பாள ரங்கநாயகம்மாவின் இக்கதைப் போக்கும் முடிவும் 'தாய்மை ஒரு குற்றமல்ல' என்று உணர்த்தும் ஜெயகாந்தனின் 'கிழக்கும் மேற்கும்' கதையை நினைவுபடுத்துகின்றன.

ஆடவரின் கண்ணிலும் கருத்திலும் பட்டு இந்நாட்டுப் பெண் இனம் எப்படி எல்லாம் கரிந்துபோக நேர்கிறது என்பதை 'இடைவேளை', 'இருட்டு’, ‘வாழ்ந்தது போதும்' போன்ற கதைகள் காட்டுகின்றன.

கணவன் தன்னை ஒதுக்கி இன்னொருத்தியைக் கைப் பிடித்து மத்தாப்புக் கொளுத்தும் போது தானும் மற்றொரு வனைத் தேடிக் கொண்டால் என்ன என்று சிந்தித்துப் பார்க்கவும் முடியாமல் அந்தகாரத்தில் அழுந்தும் ஆயிரக் கணக்கான பேதைகளின் பிரதிநிதியாக சீதாவைச் சந்திக்கிறோம். 'இருட்டில்.’

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/88&oldid=970647" இலிருந்து மீள்விக்கப்பட்டது