பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

27


3. அகமும் முகமும்

உடல் என்றால் பொன், பொருள் என்று பொருள் கூறுவார்கள்.

உடம்பு என்றால் வருந்துதல் என்ற ஒரு பொருளும் உண்டு.

மக்கள் வாழ்கின்ற உலகிற்கு கவ்வை உலகம் என்ற ஒரு பெயர் உண்டு. கவ்வை என்றால் துன்பம் என்று அர்த்தம்.

துன்பம் சூழ்ந்த பூவுலகில், இன்பமாக வாழ்வது எப்படி? இன்பமாக வாழவே முடியாதா என்ற ஒரு கேள்வியும் எழுமே!

மக்களைப் பற்றி பக்குவமாகப் புரிந்து கொண்ட சித்தர் திருமூலர் இப்படி ஒரே ஒரு வரியில் உண்மையை உரைத்திருக்கிறார்.

“மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்”

கலங்கிய நீர்போல, மக்கள் குழம்பித்தான் கிடப்பார்கள். குழப்பிக் கொண்டு திரிவார்கள். மற்றவர்களையும் குழப்புகின்ற காரியங்களையே புரிவார்கள்.

அதேசமயத்தில் அவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழ விட மாட்டார்கள்.

எங்கள் சாதி சனம் என்று சவடால் விட்டுப் பேசிக் கொண்டே, மற்ற சாதிகளோடு சண்டை