பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

59


உலரவிடுகிறபோது. அதனுடன் வெளியில் உள்ள நுண்கிருமிகள் சேர்ந்து கொண்டு அந்த தோல்பகுதியில் ஒரு மோசமான, துர்வாசனையைக் கிளப்பிவிடுகிறது. அதைத்தான் நாம், உடல் நாறுகிறது என்கிறோம்.

ஒவ்வொருவர் உடம்பிலும் இதுபோன்ற கெட்டவாசனை வீசத்தான் செய்கிறது. இருந்தாலும் உடல் நாற்றத்துடன் நடமாடுகிற ஒருவருக்குத் தம் உடம்பிலுள்ள கெட்டவாசனை தெரிவதில்லை. அவர்கள் எல்லோருடனும் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்றவர்களோ முகம் சுழிக்கிறார்கள். அவரை விட்டு அப்பால் போக எல்லோரும் அவசரப்படுகிறார்கள்.

உங்களுக்கு எப்போதாவது உங்களது உடலில் ஏதாவது துர்வாசனை கிளம்புகிறது என்று உணர்ந்தால், நீங்கள் உடனே. அந்த நாற்றத்தை அகற்றுகிற பவுடர் அல்லது வியர்வையைத் தடுக்கிற பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டு நாற்றத்தைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

நாற்றத்தை அகற்றுவது என்பதற்கும். நாற்றத்தை தடுப்பது என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். வியர்வை ஊறி வெளி வந்துகொண்டுதான் இருக்கும். நீங்கள் அதைத் தடுக்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கவேண்டும்.

வியர்வையை நிறுத்துவது என்பது, வியர்வைச் சுரப்பிகளை வற்றச் செய்து. மேலும் மேலும் வியர்வை சுரக்காமல் செய்வதாகும். இதற்குரிய இரசாயணக்