பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

61


7. ஒப்பனையால் உருவாகும் அற்புதமுகம்

முகத்தைப் பற்றி முன்னரே நாம் விளக்கமாக எழுதியிருக்கிறோம்.

மனிதர்கள் மனதிலேயுள்ள நவரசங்களையும். சுவாரஸ்யங்களையும். அதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற விந்தைமிகு உறுப்புதான் முகம் என்று.

அகத்தில் உள்ளதை முகந்து வெளியே கொண்டு வருவதால் அதற்கு முகம் என்று பெயர்வைத்தார்களோ என்னவோ.

உலகத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் எல்லாம். தங்களுக்கு ஏற்படுகிற உணர்ச்சி பாவங்களையெல்லாம். உரக்கக் குரல் எழுப்புவதால் அல்லது உடல் அசைவால்தான் வெளிக் காட்ட முடிகிறதே தவிர மனிதர்களைப்போல் முகபாவம் காட்ட முடியவில்லை.

காரணம் என்னவென்றால் மனித முகத்தின் அமைப்புத்தான். ஒரு முகமானது. 14 எலும்புகளாலான சிறு சிறு மூட்டுக்கள். ½ அங்குலம் ½ அங்குலம் கொண்ட சிறு தசைகளினாலான வடிவம். இந்தச் சிறு சிறு தசைகளினால்தான் மனித முகம் நவரச குணம் காட்டுகிறது.

மிருகங்களின் முகங்கள் எல்லாம். நீண்ட தசைகளாலும், தடித்த எலும்புகளாலும் உண்டாகியிருப்