பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பதால் முகபாவங்களை வெளியே காட்ட முடிவதில்லை. இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள். முகத்தில் ஏற்படுகிற நவரசங்களும். அப்போது உடலில் ஏற்படுகின்ற வித்தியாசமான இயக்கங்களும், அந்த இயக்கத்திற்குத் தரப்பட்டுள்ள வினோதமான பெயர்களும். உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

1. வருத்தம் ஆற்றாமல் இருதோள்மேல் தலை சாய்த்துக் கொண்டிருக்கும் முகம். அதன் பெயர் அஞ்சிதம்.

2. தலை குனிந்து அடுத்தவரைப் பார்த்தல். அதற்குப் பெயர் அதோமுகம்.

3. சம்மதித்ததற்கு அறிகுறியாகக் மேல் கீழாகத் தலையாட்டல் அகாம்பிதம்.

4. அதிசயத்தால் சிறிதளவு சிறிதாய் தலையாட்டுதல் பிரகம்பிதம்.

5. ஆசையால் மலர்ந்த முகமாய் ஒருவரை அழைத்தல், அலோவிதம்.

6. விந்தையால் ஒருதோள் மேல் தலை சாய்த்தல். உலோபிதம்.

7. தலை அண்ணாந்து பார்த்தல் உத்வாகிதம்.

8. தியானித்தல்போலத் தலை அசையாது இருத்தல் சமம்.