பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

69


முடிகளைப் பராமரிக்காமல், இருக்கிறபொழுது பலவிதமான சிக்கல்களும் சிதறல்களும் ஏற்படக்கூடும். முடி நுனியானது உதிர்ந்துபோவது போலக் கழன்று விழும் அபாயம் உள்ளது. (Splitends)

உடம்பிலே உள்ள தோல் பகுதியானது அடிக்கடி உதிர்ந்து புதுமைப்படுத்திக் கொள்வதுபோல, தலையிலுள்ள தோல் பகுதியும். அவ்வப்போது இழந்துபோன தோல்பகுதியை உதிர்த்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து கொள்ளும். அதைச் சரியாகச் சுத்தம் செய்யாவிடில். தலைப்பகுதி முழுவதும் பொடுகாகி விடுகிறது. அப்படிப் பொடுகு ஆகிறபோது. அங்கே சரியான இரத்த ஓட்டம் இல்லாததால் அரிப்பு ஏற்பட்டுப் புண்ணாகிவிடுகிறது. ஆகவேதான் தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

அடுத்துத் தலை முடியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால். அங்கே ஈறும், பேனும் எளிதில் குடிகொண்டுவிடுகின்றன. ஈறும், பேனும் இருக்கிற தலையை எல்லோரும் சொறிந்து கொண்டும், பிய்த்துக் கொண்டும் இருப்பார்கள். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். மேலே கூறிய சிக்கல்கள் ஏற்படாமல் முடியைக் காக்க ஆறு முக்கிய விதிமுறைகளை நீங்கள் கடைப்பிடித்தால் போதும்.

1. தலைமுடி தெளிவாகப் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஷாம்பு போன்ற பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.