பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

75


காதுகளே அவற்றை வரவேற்று ஏற்றுக் கொண்டு, அப்படியே அந்த ஒலி அலையை உங்களது மூளைக்கு அனுப்பிவைக்கின்றன. அதை ஏற்றுக் கொண்ட மூளை. அது என்ன ஒலி, எப்படிப்பட்டவை போன்றவற்றைத் தரம் பிரித்து அறிந்து உங்களை மேலும் கேட்கத் தூண்டுகிறது.

இவ்வாறு வெளியுலகச் சத்தங்களை மூளைக்கு அனுப்பிவைக்கிற வேலையைக் காதுகள் எப்படிச் செய்கின்றன. ஒரு காதானது. வெளிக்காது - நடுக்காது - உட்காது என மூன்று வகையாகப் பிரிந்துதான் இந்தப் பணியைச் செய்கிறது.

வெளிக்காது: விரிந்த மடலாகத் தோன்றுகிற வெளிச்செவி. வெளியுலகச் சத்தங்களை மடக்கி உள்ளே அனுப்புகின்ற வகையில் அமைந்திருக்கின்றன. அங்கே உள்ளேயுள்ள நடுக்காது வழியாக உட்காதிலுள்ள செவிப்பறைக்குக் கொண்டு செல்கின்றன. இப்படியெல்லாம் இயற்கையே நமக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றது. அவற்றைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை அல்லவா உள்காதுக்குள்ளே ஒட்டிக்கொள்ளும் பொருள்போன்ற குறும்பி ஒன்று இருக்கிறது. வெளியிலிருந்து வருகிற தூசி, தும்புகளை உள்ளே புகவிடாமல், நடுக்காதிலேயே தடுத்துநிறுத்துகிற அற்புதமான பணியை ஈரப்பசையுள்ள (Wax) இந்தக் குறும்பி செய்து நன்றாகக் கேட்க உதவுகின்றன. குறும்பிகளில் தூசிகள் சேரும்போது தானாகத் திரண்டு உருண்டு வெளியே வந்துவிடும். சில சமயங்களில் உள்ளுக்குள்ளே தங்கிவிடும். அப்படிக்