பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படியோ ஒருப்பட்டாள் விரைந்து செல்லும் புகைவண்டி ஏறிப்போய் ஊரை நோக்கித் தப்பெதுவும் நேராமல் கடந்து சென்ருேம் தழைத்துள்ள வயல்வரப்பில் நடக்குங் காலை 'அப்பப்பா நல்லவழி' என்று சொல்லி அகம்கொந்து முகஞ்சுழித்து நடந்து வந்தாள்: "இப்படிவா என்றவள்கை பற்ற ஐயோ!' என்றழுதாள் என்னென்று, புதறிக் கேட்டேன் 4 மென்காலில் முள்தைத்த தென்ன, கெஞ்சில் வேல்குத்திக் கிழித்ததுவே ருென்றும் பேசா தென்காதல் மிகுதியில்ை குனிந்து முள்ளே எடுத்தவளை "வருந்தாதே மன்னிப் பாய்நீ என்மீது சினந்தனையோ? இனிமேல் இங்கே வருமெண்ணம் இல்லைஇல்லை” என்றேன்; பாவை "என்னென்ன சொல்லுகிறீர் அத்தான் நீங்கள் இருக்கின்ற இடமேதான் இன்பப் பூங்கா!' 5 அன்றெழுந்து நின்றுகொண்டாள் ஒடிந்த உள்ளம் இனிதுமகிழ்ந் தெழுந்துவழி கடந்தேன் பின்னர் குன்றனய தோள்பற்றிக் கெந்திக் கெந்திக் - குளிர்மொழியாள் நகையாடி கடந்தாள்: 'கண்ணே! இன்றெனது மனம்கொங்து பதறி விட்டேன்' என்றவுடன் "ஆடவரே அப்ப டித்தான் ஒன்றுமிலா தஞ்சிடுவார்' என்று சொன்னுள் உள்ளங்கள் பரிமாறிச் சென்ருேம் மேலும் 82.