பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைப்பால் மட்டும் ஆறுதல் இல்லை. துணைவர் தந்த தோள்தோய் இன்பச் சின்னம் இல்லை; செருகரும் விழையும் செயிர்திர் செல்வன் சிந்தும் சிரிப்பை அள்ளிப் பருக அவாவிற் றுள்ளம் இளம்உடல் தீண்ட இன்சொற் கேட்கத் துடிதுடித் திருந்தேன்; துணைவரும் கானும் புண்ணியத் தலங்கள் புக்குங்iர் மூழ்கியும் புண்ணியம் இல்லை; புதல்வற் பேறினி உண்டோ என்ருேம் உள்ளுர்க் கணியர் ஏடுகள் புரட்டி இல்லை என்ருர், இடிந்ததென் உள்ளம் இருண்டதென் வாழ்வு மகப்பே றில்லா மலடோ அங்தோ! எனச்சின் ட்ைகள் ஏங்கி யிருந்தேன். 1. 皋。 분 திரைகடல் கடந்து செல்வங் திரட்டப் பிரிந்தனர்; நானே பெண்மையின் இயல்பால் வருந்தி மெலிந்தேன்; வந்தனர் ஒருநாள்: எழில்மணி மாட இருப்பில் இருந்தோம், குளிர் என அவர்பாற் கொண்டு சேர்த்தது, நடுங்கிய என்றன் காணம் காத்திடக் கணியர் கூற்றைப் பொய்யெனக் காட்டிட உள்ளம் நைக்கும் உறுதுயர் தீர்ந்திட இன்பக் குளிர்கிலா இருள்முகில் நுழைந்த(து): என்முகம் அவர்தம் மார்பிற் புதைந்தது: மீண்டும் திங்கள் மேலெழுந் தொளிக்கதிர் வீசிச் சிரித்தது; விடியலைக் கண்டோம்;

  • . 崙 弹、 轟。

86