பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந்த விதம்பல இரவுகள் கழிந்தன:
அந்தநன் னாளெலாம் இன்பமீந் தனையால் 20
நல்லை நல்லைஎன நவின்றேன் பலகால்;
இன்றே துணைவர் ஈங்கிலர்; அதனுற்
கொன்ற லன்ன கொடுந்துயர் தந்தனே!
நல்லை அல்லைஎன நன்குணர்ந் தேனே:
கூர்ந்து நோக்கின் குற்றம்நீ புரிந்திலை; 25
சேர்ந்தவர் பிரிந்தார் செய்தனர் துன்பம்
அதற்கென் செய்குவை? ஆய்ந்து பார்க்கின்
நல்லையும் இல்லை அல்லையும் இல்லை
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
எனவாங்கு
ஓதிய பொருண்மை உணர்ந்தேன் இன்றே 30
இரண்டும் ஒருங்கே எம்மவர் தந்தார்:
ஒருகுண மில்லாய் ஏகுதி நீயே!