பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 நகைத்து விடுவதாலும் தாம் மட்டும் கவிஞராகிவிடுவதாக ச் சிலர் நினைப்பு. இவர்கள் கவிஞர்கள் அல்லர், தாம் அமர்ந் திருக்கும் கோடு குறைக்கும் அறிஞர்கள்! பழைய இலக் கியங்களின் அமைப்பு, போக்கு, நடை முதலிய சிறப்புக் களே இவர்கள் திரும்பியும் பார்ப்பதில்லை; இதனுல் இவர் கட்குப் பரம்பரை உணர்வும் வாய்ப்பதில்லை. பாரதிதாசனத் தந்தை என்றும் பாரதியைப் பாட் டன் என்றும் உரிமையோடு கூறிக்கொள்ளும் முடியரசன், அவர்களைப் போலப் பரம்பரையுணர்வு மிக்கவர். பழைய தமிழ் இலக்கிய மரபுகளைக் கற்றுப் போற்றுபவர். இத ல்ைதான் 'வாழையடி வாழை என வந்த கவிஞர் கூட்டத்தில் சிறப்புடைய ஒருவராக இவர் திகழ்கிரு.ர். IV சில கவிஞர்களிடையே மற்றுமொரு குறை உளது. இக் காட்டுக் கவிஞராகத் திகழ ஆசைப்படும் இவர்கள் தமிழைப் புறக்கணிக்கின்றனர்; தமிழ் இலக்கிய, இலக் கண அறிவை இழித்துரைக்கின்றனர்; தமிழ், தமிழினம், தமிழ் நாடு என்பதெல்லாம் குறுகிய மனம் எனக் குறை கூறுகின்றனர். மேட்ைடுக் கவிதைகள் பற்றித் தாம் கேட் டதையும் ஒரு சில பார்த்ததையும் வைத்துக் கொண்டு அங் நாட்டு மரபுகளையே பின்பற்றுகின்றனர். அவற்றையே புகழ்ந்து திரிகின்றனர். இதற்குச் சார்பாக யாம் இக் நாட்டிற்கு மட்டும் உரிய, குறுகிய மனம் படைத்த கவிஞர் அல்லேம், உலகக் கவிஞராவேம்' என்று இறு மாந்து பேசுகின்றனர்.