பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பாரதியையும் தாகூரையும் அறிந்தால் இவர்கட்கு உண்மை விளங்கும். அவர்கள் தங்கள் தங்கள் காட்டுக்கு முழு உரிமையுடைய கவிஞர்களாகத் திகழ்ந்துதானே உலகக் கவிஞர்களாக உயர்ந்துள்ளார்கள்! அவ்வாறன்றி 'உடனே உலகக் கவிஞராகும் போக்கு." காலூன்றி நடக் கப் படிக்காத குழந்தை, தாவப் படித்த கதையாகும். மேலும் இத்தகையவர்கள் கிலே, காலம் மாறி விதைக்கப் பட்ட பயிர் போலவும் இடம் மாறி நடப்பட்ட செடி போலவும் இரங்கத் தக்கதாக முடியும்! பாரதியைப் பாருங்கள். தமிழ் என்ருல் தேனூறும் நன்னெஞ்சம் அவன் நெஞ்சம்! தமிழ் நாட்டுப் பெயர் கேட்டால் தேன் பாயும் இரு செவிகள் அவன் செவிகள்! தமிழினத்தைப் பாடுங்கால் பூரிக்கும் இருதோள்கள் அவன் தோள்கள்! இத்தகையான் குறுகிய மன த்தவன? கூறுங்கள்! கவிஞன் என்பவன் நுண்மை மிக்க உணர் வுடையவன். காட்டுப் பற்றின் உயர்ந்த எல்லையையும், மொழிப் பற்றின் ஆழ்ந்த எல்லேயையும், இனப் பற்றின் விரிந்த எல்லையையும் கவிஞன் ஒருவனிடந்தான் காண முடியும். கவிஞனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய இவ் வுணர்வுகளேயே குறுகிய மனம் என்று குறை கூறுவது முறையாகுமா? பிறந்த மண்ணில் காலூன்ருமல், உண்ட சோற்றுக்கு நன்றி காட்டாமல், உணர்வூட்டிய மொழிக்குத் துணையா காமல் பரந்த மனப் பான்மை பேசும் விரிந்த அறிவு எதற்கு? அந்தக் கூட்டத்தில் சேராததால்தான் முடியர சன் சிறப்புடைய கவிஞராகத் திகழ்கிருர். இவரது பாடல் களில் வரிக்குவரி, சொல்லுக்குச் சொல் இவ்வுணர்வுகள்