பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட்டோம் நாங்களும் எரிந்தன அழிந்தன! சிட்டரே தமிழின் சிறுமையைப் பாரீர் !' சமணர் இங்ங்னம் சாற்றினர்; 'உங்கள் சமயச் சிறுமையைச் சாற்றுவ ததுவே தமிழின் குறைவெனல் சரியிலே' என மன அமைதி குலைந்திட அறைந்தனர் சைவர்; 'இருப்பினும் அழிந்தவை இன்தமிழ்ப் பாட்டே நட்டமும் நமக்'கென கவின்றனர் சமணர், "ஆமாம் உண்மை அறிந்திலோம் முன்ள்ை சமயப் போரிற் சாய்த்தனம் பலநூல் கட்சி சமயம் கடந்தது தாய்மொழி எச்சார் பினர்க்கும் இருந்திடத் தகுவது மொழியுணர் வொன்றே, முன்னுதல் வேண்டும்' என்றனர்; மற்றவர் இவ்வுணர் வங்காள் ஒன்றி.டின் உயரிய நூலெலாம் கிலேக்கும் கூத்தும் இசையும் கூறிய நூற்கள் வேத்தவை விரும்பிட விறல்படப் பாடிய கருவூ லங்கள் எத்தனை காண்கிலேம்! எங்கே எங்கே எம்முடைச் செல்வம்? இனவுணர் வின்றி இடையில் வந்தவை மனமதில் நிலைத்தல் மாண்பிலை” என்றனர்; பள்ளி எழுச்சி பாடினள் பாவை துள்ளி எழுங்தேன் துயிலுங் கலைந்ததே! 131 30 25 30 35 40