பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சமயமென்றும் தொழிலாளர் இயக்க மென்றும் சார்ந்தோருள் எவரைவிரும் பிடுவீர் என்ருல், சமயமுறின் பின்னவர்க்கே என்வி ருப்பைத் தருவேன் என் றறுதியிட்டுச் சொன்ன சொல்லில் இமயமலை பெயர்ந்தாலும் பெயரா வுள்ளம் எதிர்ப்புக்கும் கொடுஞ்சிறைக்கும் அஞ்சா வூக்கம் அமையவரு பெற்றியினர் : மார்க்சு சொன்ன அறவுரையைத் தெளிவாக உணர்ந்த சான்ருேர் 4 பெண்ணினமும் ஆணினமும் சமுதாயத்தின் பெருமைமிகும் இருகண்கள் ; பெண்மை என்னும் கண்ணுெளியைக் கெடுத்தனரே உலகோர் அங்தோ! கருணைஒளிர் தாயினத்தைத் தாழ்த்தல் கன்ருே? எண்ணிவிடின் நோகின்ற தென்றன் நெஞ்சம் ஏனிந்த ஒரவஞ்சம்? நேர்மை வேண்டும் ; பெண்மைஇன்றி ஆணில்லே அதனல் பெண்மை பேணிடுக சமுதாயம் தழைக்க என்ருர் 5 பெற்றெடுத்த தமிழ்த்தாயின் பாலை உண்டோன் பெறுமின்பம் உயரின்பம்; வீடு பேற்றை எற்றுக்காம் எனக்கருதச் செய்யும் அந்த இன்பமது என்ருர் தாய் மொழியை நன்கு கற்றபிற கயல்மொழியைக் கற்றல் வேண்டும் கனித்தமிழை உயிர்த்தாயைத் தவிக்க விட்டு நிற்றல்பெரும் பிழைஎன்ருர்! தாய்த விக்க கினைப்பாரோ எவரேனும் அறமே செய்ய? 146