பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பொருள் தந்து போய்வாவென் றென்னேப் போக்கிப் பூரித்த தகவும்"சிங் கார வேலன் பொரிநெருப்பு முடியரசன் குளிர்ர்ே' என்ற பொன்னுரையும், எம்மிடத்துக் குறைகள் காணின் கருவிழியும் செவ்விழியாய்ச் சினங்தும் அந்தக் கணப்பொழுதே அருள்பொழிந்தும் பொதுப்பணிக்கே இரவுபல விழித்தெம்மை ஏவும் ஏவல் இத்தனையும் தாத்தாlநான் மறத்தல் ஆமோ? 7 உழைப்பவர்க்கே உரித்தாய பொங்கல் நாளில் உயர்தமிழைத் தமிழினத்தை ஒங்கச் செய்ய உழைப்பதற்கே உரம்பெற்று வாழ்க! என்றென் றுமையின்று முழுமனத்தால் வாழ்த்து கின்றேன் குழைத்தெடுத்த தேன்பொங்கல் உண்ணும் போழ்து கூறுகிறேன் வாழ்த்துரையை மயிலை முத்தே ! மழைத்துளியால் வளர்பயிர்போல் நும்மு முைப்பால் வாழ்க.தமிழ் ஆட்சிபெற்று வாழ்க! வாழ்க ! -3 150