பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் அறுசீர் விருத்தம் 1 முரண்டியனை நினைப்பூட்டும் பார்வையினன் பாழான பழமை வேண்டான் மாண்டநல்ல சங்கத்தார் தமைப்போல்வான் மனத்தில்எழும் புதுக்க ருத்தை வேண்டியமட் டுங்கொடுப்பான் வீரத்தை ஊட்டிடுவான் ஊழிக் காலம் தாண்டியல் தமிழ்மொழிமேல் மீசையின்மேல் தணியாத காதல் கொண்டான்

  • _1

2 இனி அஞ்சார் தமிழ்மக்கள் தமிழுக்கோர் இடுக்கண் இனி வருதல் இல்லே கனிமொழியில் காதலைத்தான் பகுத்தறிவுக் கதிரைத்தான் காட்டி விட்டான் நனிமகிழ்ந்து தமிழரெல்லாம் போற்றுகிருர் நம்மினத்தார் விளங்கப் பாண்டி இனிதளித்த பரிசிலவன் எதிர்ப்பஞ்சா இயற்கவிஞன் ஏறு போல்வான் 15.4