பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி நிலைமண்டில ஆசிரியப்ப் - * - " . . . l ஆரிய மாக்கள் அவர்நிலம் விட்டுச் சிரிய உயர்தனிச் செம்மொழி வழங்கும் தமிழகம் புகுந்து தறுகண் அருள்நிறை தமிழர்க் கெல்லாம் தகுநிறை கற்பினைச் சொற்றனர் எனச்சில கற்ருேர் செப்பினர்: நற்றகு மரபினர் கற்பறி யாரோ ? நன்ருே இதுவென நானயர்ங் திருந்தேன்; துன்றிய அரசினைத் துறந்திடு துரயோன் இளங்கோ என்முன் தோன்றி 'மனத்தைத் துளங்க விட்டாய் துயருனக் கேனே ? என்றனர்; என்துயர் இதுவெனச் சொன்னேன்; 'மதியிலி கேட்பாய் ! மாதவி வாழ்வு புதுவ தன்றே புகல்வதை யறியாய் ! ஆட்டம் பயின்ருள், அரசனும் விரும்பும் கோட்டமில் குணத்தாள், கோவலன் றன்மேல் நாட்டங் கொண்டாள், நல்லற மென்னும் இல்லறம் பூண்டாள், எழில்மணி மேகலைப் பேறும் பெற்ருள் இப் பெரிய வாழ்வு மாறுமோர் நாளென மனத்திலும் கினையாள் 170 5 IO 15