பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 3

உறுதுணையாய் வேறெவரும் இல்லான், உண்ண
ஒருவழியும் அறியாதான், எழுத்தும் எண்ணும்
பெருவகையும் காணாதான், கோவில் வாயில்
பெரியவர்கள் சிதறவிடும் தெங்கின் காயை
மறுசிறுவர் பொறுக்குதற்கு மனமில் லாமல்
மல்லுக்கு நிற்பான்,அவ் வாயில் ஒன்றே
உறுமனையாய் வாழ்சிறுவன் பிச்சை யின்றி
உயிர்வாழ எண்ணினவற் கேது வாழ்வு ?

169