பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ண ம க னு க் கு

நிலைமண்டில ஆசிரியப்பா

ணமகள் நயந்திட மற்றுளோர் மகிழ்ந்திடப்
புதுமணக் கோலம் பூண்டிடும் நினக்குப்
புகல்வதொன் றுளது புந்தியிற் கொள்க!
தேன்மலர் இதழில் தென்றல் வருடத்
தோன்றுமோர் நறுமணம்; துளிர் அரும் பாயினும் 5
அழிவுறு மலரே ஆயினும் அவற்றுள்
நறுமணம் தோன்ருது நாடுகன் குணரும்;
மக்கள் மணமும் அத்தகு சிறப்பே,
மணம்பெறு பருவம் வந்துள பெண்பால்
பூவின் தன்மை பொலிவதால் அவளைப் 10
பூப்படைக் தனளெனப் புகன்றிடும் உலகம்;
மலரும் தென்றலும் மணந்திடத் தரகர்
எவரும் இல்லை; இதுவே தமிழர்
மணமுறை யாகும்; மற்றைய எல்லாம்
தமிழ்மணம் அல்ல வந்தவர் தந்தன; 15
இதனே உணர்ந்து இனிய தமிழால்
மணம்பெறும் அன்ப! வாழ்க! வாழ்க!
பெண்மைக் குயர்வு பேனுக! உடல்நலம்
காத்துக் குழந்தைகள் கணக்கொடு பெறுக!

190