பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டண வாழ்வு முதன் முதலாகச் சென்னைப் பட்டணத்தைக் கண்டு பாடியது இது. மொழியுணர்ச்சி காரைக்குடி அழகப்பா கல்லு ரியி' நடைபெற்ற கவி யரங்கில், திரு, ப. துரைக்கண்ணு முதலியார் தலைமையில் பாடப்பெற்றது. மணிவிழா வாழ்த்து பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களின் மணிவிழா வுக்காகப் பாடப்பெற்றது. தமிழர் தந்தை கவியரசர் பாரதிதாசனர் மணிவிழா மலரில் வெளி யிடப் பொன்னி' இதழார், 'பாரதிதாசன் தமிழர்களின் தந்தை' என்னுந் தலைப்பைத் தந்தனர் : அப்பொழுது பாடப்பெற்றது. வாழ்த்துகிருர் அமராவதி புதுார் மகளிர் இல்லம் கண்ட திரு சொ. முருகப்பனர் மணிவிழாவுக்காகப் பாடப்பெற்றது. வாயுறை வாழ்த்து கவிஞரின் உயிர் நண்பரான திரு தமிழண்ணலுக்கும் அடைக்கம்மை என்ற சிந்தாமணிக்கும் நடைபெற்ற திருமணத்தில் பாடப்பெற்றது. கா அப்பா திரு கா. அப்பாதுரையார், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றமைக்காகத் திருச்சிராப் பள்ளியில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பாடப்பெற்றது. 215