பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நீர்சேந்தி நிறைத்தகுடம் இடுப்பில் வைத்து நெளியஒரு கைவிசிச் செல்லும் சிற்றுார் சேர்மாதர் மென்னடையில், குருவி காக்கை செழுங்கதிரைத் தின்னமல் காப்ப தற்கு வார்தொடுத்த கவண்வீசிக் கூவுங் காலே வாயெழுப்பும் இசைக்குரலில், மண்ணை வெட்டி நீர்கட்டும் தொழிலாளி ஸ்ே பு யத்தில் நின்றுநடம் செய்கின்ற அழகைக் கண்டேன் 4 கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள்தம் வாயில் கோழி வேல்மூக்கால் அன்பு:கலங் திரையை யூட்டும் வே%ாயிலும், வானத்து வீதி செல்லும் பால் நிலவுப் பெண் தனது விண்மீன் என்னும் பல்விரித்துச் சிரிக்கின்ற போதும், மண்மேல் கால்இழுத்துத் தவழ்கின்ற குழந்தை பேசும் காலத்தும் நல்லழகின் சிரிப்பைக் கண்டேன் 5 வெம்புலியின் பாய்ச்சல்தனில், வீரன் ஏந்தும் வேல்துணியில், தோள்வலியில், படம்வி ரித்து வெம்பிஎழும் நாகத்தின் ஆட்டங் தன்னில், விரிகொம்பு மான்விழியில், தேனை உண்ணத் தும்பிஎழுந் தார்க்கின்ற முல்லேக் காட்டில்: தோகைவிரித் தாடுகின்ற மயிலி டத்தில், செம்பவமுக் கொடிக்கடலின் அலேக்கூட் டத்தில் சேர்ந்திருக்கும் அழகெல்லாம் சிரிக்கக்கண்டேன் T 22 !