பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 6 இங்கெல்லாம் சிரிக்கின்ற அழகு கண்டேன் இனியதமிழ் பேசுகின்ற மனிதன் வாழ்வில் பொங்கிவரும் அழகில்லே! உழைத்துண் டாக்கும் பொருளெல்லாம் பிறர் நுகரப் பெற்ற தாலோ தங்கள் குலம் வாழாமல் சுரண்டு வோரைத் தரைமட்டம் ஆக்கஎழும் எண்ணத் தாலோ மங்குமவன் முகத்தினிலே சிரிப்பும் இல்லை! மனிதரினம் விலங்கினமாய் வாழல் நன்ருே ? 7 மக்கள் நலம் பேணுகின்ருேம் என்று சொல்லி மணிப்பீடம் ஏறிவிட்டோர் மதத்தின் பீடம் தக்கதுணை என்றெண்ணி அயர்ந்து விட்டார் ; தறிகெட்டுத் திரிகின்ருர், மேடை ஏறிக் கொக்கரித்தல் ஒயவிலே சட்டத் தாலும் கொடுமைகளும் மாயவிலே அறிவு மாய்க்கும் அக்குணத்தார் ஆட்சியிலே அழகும் இல்லே ஆதலினல் வாழ்க்கையிலே சிரிப்பும் இல்லை! 8 ஆற்ருலும் மலேயாலும் சோலை யாலும் அழகுசிரித் தாடுகின்ற நாட்டில் வாழ்விர்! சோற்ருலே துயருறுவோர் தமிழர் என்னும் சொற்கேட்டுத் துடித்திலதோ உங்கள் உள்ளம்? மாற்ருளின் காலடியில் நாட்டை விட்டீர்! மடிகின்றீர்! இக்கேட்டை அழிக்கும் எண்ணம் தோற்ருதோ உங்களிடம்? அடிமை வாழ்வு っ一ー丁 தொலையாதோ? அழகிங்கே சிரிப்ப தென்ருே?" 23