பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஐம்பூதத் தொன்ருன காற்றிலேயேல்
அம்புவியில் இயக்கம் ஏது ? -
தெம்பேது மக்களுக்கு ? துயில்பவனைத்
தெருளில்லா இரவுப் போதில்
ஙம்பூறும்படி அவனேர் பிணமல்லன்
எனுந்திறத்தை நவில்வ தெல்லாம்
மென்பூவின் மூக்கில்வரும் காற்றன்ருே ?
மேதினியே காற்ருல் வாழும்.
7
பணிவோர்க்குக் காப்பளித்துப் பணியாரை
வேரறுப்பர் பண்டை எங்கள்
அணிசேர்க்கும் முடியரசர்;பெருவளியும்
அடிக்குங்கால் ஆற்றின் நாணற்
பணிவேற்றுக் கொண்டங்கு தலைநிமிர்ந்த ::பனைதென்கின மரங்கள் யாவும்
அணிவேரற் றடிவீழச் செய்திடுமால்
ஆருக்கும் பணிதல் கன்ரும்.
8
நீர்கொண்ட மேகத்தைக் கடலினின்று
நெடுக்தொலைவு உந்தி வந்து
பேர்கொண்ட மலைப்பாங்கிற் சேர்ப்பதுவும் ::பின்னுமதைக் குளிரச் செய்து
நீர்கொட்டச் செய்வதுவும் காற்றன்ருே ?
நீணிலத்துச் சான்ருேர் என்ற
பேர்பெற்ருேர் அடுத்தடுத்து நன்மைகளே
பேணிவந்து செய்தல் காட்டும் ;

3? --"